தமிழ் குரல்கள் 

 விடுபட்ட  குரல்களுக்கான தளம்  

 1. சாமானிய மக்களை பற்றியும் அரசு சிந்தித்திருக்கலாம் - விஜய் கருத்து

  சாமானிய மக்களை பற்றியும் அரசு சிந்தித்திருக்கலாம் - விஜய் கருத்து

  வழக்கமாக நடிகர் விஜய் வெளிப்படையாக எந்த ஒரு அரசியல் கருத்தையும் வெளியிடுவதில்லை. ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை, மீனவர்கள் பிரச்சனைக்காக பல போராட்டங்களை தானே முன்னின்று நடத்தியிருந்தாலும், நாளுக்கு நாள் நடக்கும் அடிப்படை அரசியல் விவாதங்களில் அவர் கருத்து வெளியிடுவதில்லை. இந்த நடைமுறைக்கு மாறாக இன்று இந்த 500,1000 ரூபாய் தாள்கள் விவகாரத்தில் மக்கள் தள்ளாடும் இந்நேரத்தில் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். அரசின் நடவடிக்கையை பாராட்டிவிட்டு,  அதை செயல்படுத்திய விதத்தையும் சற்று
  11/15/2016
 2. ராஜபக்சவை மறுபடியும் அரியணையில் ஏற்ற சீனா முயற்சி?

  ராஜபக்சவை மறுபடியும் அரியணையில் ஏற்ற சீனா முயற்சி?

  சமீபத்தில் இலங்கைக்கான சீன தூதருக்கும் இலங்கையின் நிதியமைச்சருக்கும் இடையே நடந்த கருத்துப்போர் பற்றிய செய்தியை படித்திருப்பீர்கள். அதன் தொடர்ச்சியாக இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டுவர சீனா முயற்சிக்கிறதா என்ற ஐயப்பாடு அரசியல் அவதானிகள் மத்தியில் எழாமல் இல்லை. கடந்த மாதம் சீனாவில் நடந்த பாதுகாப்பு சம்மேளத்திற்கு இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அழைக்கப்பட்டதும், அவருக்கு அங்கு இலங்கையின் இந்நாள் பாதுகாப்பு செயலாளருக்கு நிகரான மரியாதை வழங்கப்பட்டதும் இலங்கை அரசை
  11/07/2016
 3. தமிழர்களுக்கு எதிரான சட்டத்திற்கு இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு

  தமிழர்களுக்கு எதிரான சட்டத்திற்கு இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு

  முஸ்லீம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர எடுக்கப்படும் முயற்சிகளுக்கு எதிராக நேற்று கொழும்பில் இலங்கை  தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு நடத்திய போராட்டத்தில், தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான தீவிரவாத ஒழிப்புச் சட்டத்தை இலங்கை அரசு நீக்க கூடாது என்ற கருத்தும்  முன்னிறுத்தப்பட்டது. மேலும் இதைப்பற்றி இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்  துணை செயலாளர் ரஸ்மின்  கூறுகையில் "ஐரோப்பிய ஒன்றியம் சொல்லுவது போல் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செயதாலோ, பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கினாலோ அது இலங்கையின்
  11/04/2016